இலங்கை தரப்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யுதேசிகா பிரபோதனி 2 விக்கெட்டுகளையும், அச்சினி குலசூர்யா மற்றும் சமாரி அத்தப்பத்து தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்திய அணி 125 ரன்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின், தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கௌர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் 125 ரன்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்து, அதன் பின் 250 ரன்களை இரண்டு முறை கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதற்கு முன்பாக, கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின், அந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.