பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்தியா ஏ அணியில் இடம்பெற்ற இளம் வீரர் இந்திய அணியுடன் இணையவுள்ளார்.
பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.