ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டிணம், தொண்டி, களிமண்குண்டு, அழகன்குளம், கோரைக்குட்டம், திருப்புல்லாணி போன்ற பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ள நிலையில் தற்போது உள்பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. திருப்புல்லாணி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல ஊர்களில் இக்காசுகளைக் கண்டெடுத்த நிலையில் தற்போது செல்வநாயகபுரத்திலும் இத்தகைய நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆயிரம் ஆண்டு பழைமையான இந்த நாணயத்தை கண்டெடுத்த மாணவன் பிரசித் பாலனை, பள்ளி தலைமை ஆசிரியர் அகமது பைசல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.