முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூஸிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே, தென்னப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில் சனிக்கிழமை(ஜூலை 26) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து – தென்னாப்பிரிக்கா களம் கண்டன.
முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் திரட்டியது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.