முத்தலாக் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? – மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

Dinamani2f2025 01 292fxw9hlwpl2fani 20250129084719.jpeg
Spread the love

முத்தலாக் கூறியதாக முஸ்லீம் ஆண்கள் மீது இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

முஸ்லீம் சமூகத்தில் மனைவிக்கு மூன்று முறை ‘தலாக்'(விவாகரத்து) என்று கூறி கணவன்மார்கள் விவகாரத்து செய்யும் வழக்கம் இருந்தது. 2019-ல் மத்திய அரசு முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்ததையடுத்து, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முஸ்லீம் ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.

முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்த தரவுகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க |

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தால் அது செல்லுபடியாகாது, கணவன்-மனைவி இடையே உறவு தொடர்கிறது, முத்தலாக் கூறி கணவன் மீது வழக்கு தொடரப்பட்டாலும் அவர்களின் உறவு தொடர்வதாகவே அர்த்தம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், மனுதாரர்கள் பெரும்பாலான முத்தலாக்கை ஆதரிக்க வேண்டும் என்று வாதிடவில்லை, மாறாக அவ்வாறு செய்யும் ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்வது உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளையே எதிர்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *