முத்துக்குமரனைத் தொடர்ந்து பணப்பெட்டியை எடுத்த மற்றொரு போட்டியாளர்!

Dinamani2f2025 01 152fws4y9pua2fmuthukumaran Money Box.jpg
Spread the love

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரனைத் தொடர்ந்து மற்றொரு போட்டியாளரும் பணப்பெட்டியை வெற்றிகரமாக எடுத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் போட்டி முடியவுள்ளதால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் தற்போது 8 போட்டியாளர்கள் இறுதியாகியுள்ளனர். இவர்களில் ரயான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மற்ற 7 பேரில் 4 பேர் இறுதிக்கு முன்னேறவுள்ளனர்.

இதனிடையே 100வது நாளான நேற்று (ஜன. 14) பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி எடுக்கும் தருணம் அரங்கேறியது. ஆனால் வழக்கமாக இல்லாமல், இதுவரை இல்லாத வகையில் பணப்பெட்டி வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது.

பணப்பெட்டி எடுக்க புதிய விதி

பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்குள் வர வேண்டும். அப்படி வருபவர்களுக்கு பணம் சொந்தமாகும். மேலும் அவர் போட்டியிலும் தொடரலாம். மாறாக குறித்த நேரத்துக்குள் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் மீண்டும் வரவில்லை என்றால், இத்துடன் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே நிபந்தனை.

இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு முதல் நாள் பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தார். 300 மீட்டர் தூரத்தில் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியை 30 விநாடிகளுக்குள் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டார். இதனால் பணமும் அவருக்குச் சொந்தமாகிவிட்டது. மேலும் போட்டியிலும் அவர் நீடிக்கலாம்.

ரயான்

இதேபோன்று இன்று மற்றொரு போட்டியாளரான ரயான் பணப்பெட்டியை எடுத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ரயான் நீண்ட தூரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்துக்கான பணப்பெட்டியை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

முத்துக்குமரனைத் தொடர்ந்து பணப்பெட்டியை எடுத்த ரயானுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *