அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார்எழுந்தது.
வழக்குப்பதிவு
இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவரது பெயரை சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நில உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து நில அபகரிப்பு, கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கரூர் வாங்கல் போலீஸ்லயத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை
ஏற்கனவே தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவர் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கூறுப்படுகிறது. அனால் கோர்ட்டு நடவடிக்கைக்கு முன்னதாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விபரத்தை வைத்தும் அவர் பயன்படுத்தும் செல்போன் எண்ணை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.