ரஞ்சிக் கோப்பைக்கான மும்பை அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வாளருமான மிலிந்த் ரெகே புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 76
மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரெகே, புதன்கிழமை காலை 6 மணியளவில் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
மிலிந்த் ரெகே தனது 26 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து விலகியிருந்தார், பின்னர் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ரெகே மும்பை அணியின் ரஞ்சி கேப்டனாகவும் இருந்தார்.
1966-67 மற்றும் 1977-78 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் 52 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள மிலிந்த் ரெகே, 1532 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 126 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.