உடனே அவரை ரயில்வே போலீஸார் காந்திவலி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் கொண்டு சென்றபோதே இறந்துவிட்டார். இது குறித்து போலீஸார் அலோக் சிங் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தனர். அலோக் சிங் விலேபார்லேயில் உள்ள நர்சி மோன்ஜி கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். அங்கு அவர் கணித பாடம் எடுத்து வந்தார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று, கத்தியால் குத்திய நபரை பார்த்த மற்றும் வாக்குவாதத்தை ரயிலில் நேரில் பார்த்த சாட்சிகள் எங்களிடம் உள்ளனர். நாங்கள் அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறோம். மலாடு மற்றும் முந்தைய ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாள காண முயன்று வருகிறோம் துப்பு கிடைக்குமா என்று ஆய்வு செய்து வருகிறோம்.
கத்திக்குத்து மிகவும் ஆழமாக இருந்தது.”‘ என்று தெரிவித்தனர். அலோக் சிங்கிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அலோக் சிங் மிகவும் அமைதியானவர் என்றும், எந்த சண்டைக்கும் செல்லக்கூடியவர் கிடையாது என்றும் அவர் பணியாற்றிய கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அலோக் சிங்கின் தந்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.