மும்பை: ரயிலில் மராத்தி பேசாத மாணவனை அடித்த சக பயணிகள்: அவமானத்தில் தற்கொலை | Mumbai: “Dad is beating me” – Fellow passenger beats up student who doesn’t speak Marathi on train: commits suicide in humiliation

Spread the love

இதையடுத்து தானே ரயில் நிலையத்தில் இறங்கி வேறு ரயில் மூலம் முலுண்ட் சென்று கல்லூரிக்குச் சென்றார். ஆனால் கல்லூரியில் எந்த வித வகுப்பிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு வந்த பிறகு தனது அறை கதவைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Maharashtra: மராத்தி பேசாத மாணவருக்கு ரயிலில் உதை

Maharashtra: மராத்தி பேசாத மாணவருக்கு ரயிலில் உதை
Rail (Representational) Canva

இது குறித்து அம்மாணவனின் தந்தை கூறுகையில், “‘எனது மகன் புறநகர் ரயிலில் கல்லூரிக்குச் சென்றபோது எனக்கு போன் பண்ணி சிலர் என்னை அடிக்கிறார்கள் என்று தெரிவித்தான். முன்னால் நின்றவரிடம் சற்று தள்ளி நிற்கும்படி சொன்னதற்கு ஏன் மராத்தியில் பேசவில்லை என்று கேட்டு அடிப்பதாகத் தெரிவித்தான்.

அதோடு அதிகமானவர்கள் இருக்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது என்று என்னிடம் தெரிவித்தான். அவன் தானேயில் இறங்கி வேறு ரயில் மூலம் கல்லூரிக்குச் சென்றுவிட்டு வகுப்பு எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தான்.

நான் வேலை முடிந்து தாமதமாகத்தான் வந்தேன். வீட்டில் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. நான் பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு கதவைத் திறந்தபோது உள்ளே எனது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தான்” என்றார்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இருக்கையில் அமர்வது அல்லது, கை, கால் பட்டுவிட்டதாகக் கூறி அடிக்கடி ரயிலில் பயணிகளிடையே சண்டை வருவது வழக்கமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *