மும்பை: 85 பேருடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது! மாயமானோரை தேடும் பணி தீவிரம்

Dinamani2f2024 12 182f408l65hc2fpti12182024000267a.jpg
Spread the love

மும்பையில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான எலிபேண்டா தீவுக்கு 80 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பெரிய படகின் மீது கடலில் சென்று கொண்டிருந்த சிறிய ரக படகு ஒன்று அதிவேகத்தில் மோதியதில் பயணியர் படகு பலத்த சேதமடைந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர், படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதகதியில் ஈடுபட்டனர். மீட்புப்பணியில் இந்திய கடற்படையின் 11 படகுகளும் கடலோர காவல்துறையின் 3 படகுகளும் கடலோரக் காவல்படையின் ஒரு படகும் ஈடுபட்டுள்ளது. 4 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணி முடுக்கி விடப்பட்டது. அவர்களுடன் அப்பகுதியில் உள்ள மீனவர்களும் இணைந்து பயணிகளை மீட்டனர்.

கடலோர காவல்படையின் சிறிய ரக ரோந்துப்படகு ஒன்று படுவேகத்தில் சென்று பயணியர் படகை முட்டியதே விபத்துக்கான காரணம் எனப்படுகிறது. இது குறித்த விரிவான விசாரணை நடைபெறுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *