முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமை பறிபோகும் அபாயம்: வேல்முருகன் | tamilaga valvurimai katchi leader velmurugan slams kerala govt

1380094
Spread the love

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை பறிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. தென் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்றும் அணையை இடித்துவிட்டு மாற்று இடத்தில் அணையை கட்ட வேண்டும் என்று கேரள கம்யூனிஸ்ட் அரசு மற்றும் அம்மாநில பொதுநல அமைப்புகள் அணையை இடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, ‘கேரள பாதுகாப்பு பிரிகேட்’ என்ற தன்னார்வ அமைப்பு சார்பில், வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தேசிய மற்றும் சர்வதேச அணை பாதுகாப்பு நிபுணர்களை வைத்து, முல்லைப் பெரியாறு அணையின் முழுமையான பாதுகாப்பு மதிப்பீடு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், அணையின் சீரமைப்பு நடவடிக்கைகளையும், சாத்தியமானால் அணையை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையையும் எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த வழக்கை ஆதரித்துக் கேரள அரசும் வழக்கில் இணைந்து வாதிட்டுள்ளது. ஆனால், இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள் வாதிட்டார்களா? என்பது தெரியவில்லை. இவ்வழக்கு கடந்த 13.10.2025 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், “முல்லைப் பெரியாறு அணை மிக மிகப் பழைய அணைகளில் ஒன்று, இந்த அணையின் கட்டுமானத்தை மேலும் வலுப்படுத்திட அல்லது வல்லுநர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி இதனைப் பாதுகாப்பது பற்றியும் இதன் பாதுகாப்பை சோதித்திடவும் புதிய அணை கட்டுவது பற்றியும் ஆய்வு செய்வோம்” என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

கேரளத்தில் இந்திய தேசியம் பேசும் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் சரி, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தால் சரி, தமிழ்நாட்டிற்கு கேரளத் தண்ணீர் போகக் கூடாது; ஏதாவது காரணம் சொல்லி முல்லைப் பெரியாறு அணையை இடித்து தகர்த்து விட வேண்டும் என்பதில் அவ்விரு கட்சி ஆட்சிகளும் தீவிரமாக இருக்கிறது. தமிழர்களுக்கு எதிரான இனக் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற செயல்களில் அம்மாநில அரசும், மலையாள அமைப்புகளும் தீவிரமாக இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் புதிய வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து 136 அடியிலிருந்து 142 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கலாம் என்று 2006ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கேரளா அரசு தனிச் சட்டம் இயற்றி 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கிட கூடாது என்றது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயலற்ற தாக்கியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. கேரள மாநில அரசு போட்ட மேற்படி சட்டம் செல்லாது என்று 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் கேரளா அரசு தனிச் சட்டம் இயற்றி 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கிட கூடாது என்றது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயலற்ற தாக்கியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. கேரள மாநில அரசு போட்ட மேற்படி சட்டம் செல்லாது என்று 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் தலைமையில் அதிகாரமுள்ள செயலாக்க குழு அமைத்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ. ஆர். லட்சுமணன், கேரளாவைச் சேர்ந்த நீதிபதி கே.டி. தாமஸ் ஆகிய இருவரும் உறுப்பினர்கள்.

இந்த நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் அமைத்த அதிகாரக் குழு தனது அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது, அது பாதுகாப்பாக உள்ளது என்று கூறியது, இரு மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவை நிரந்தரமாக அமர்த்தி, அது அவ்வப்போது – குறைந்தது மாதம் ஒருமுறை முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து அதன் வலு குறித்து அறிக்கை தர வேண்டும் என்பது மேற்படி செயலாக்க குழுவின் வழிகாட்டுதல் ஆகும்.

அதன்படி அந்த வல்லுநர் குழு அவ்வப்போது முல்லைப் பெரியாறு அணையைச் சோதித்து, அதன் வலுத் தன்மைக் குறித்து அறிக்கை கொடுத்துக் கொண்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை 24 மணி நேரமும் கேரள அதிகாரிகளின் – கேரள காவல் துறையினரின் கண்காணிப்பில் இருக்கிறது. ஆனாலும், முல்லைப்பெரியாறு அணையை இடித்து தகர்க்க, கேரள அரசும், அங்குள்ள கட்சிகளும், மலையாள அமைப்புகளும் தீவிரமாக செயலாற்றி வருகிறது.

ஏற்கெனவே பாலாறு, தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளை இழந்து விட்டோம்; காவிரியில் பாதி உரிமையை இழந்து நிற்கிறோம். எனவே, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் கருத்துக்கும்,- கட்டளைக்கும் சட்டத் தடுப்புகள் போட சட்டரீதியாக போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ள்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *