முல்லை பெரியாறு அணை கட்டுமானத்திற்காக பயன்படுத்தபட்ட கலவை இயந்திரம் விற்பனையா? அதிர்ச்சி தகவல்கள்!

Spread the love

முல்லை பெரியாறு அணை தேனி மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உணர்வு பூர்வமான விஷயமோ, அதே அளவிற்கு அந்த அணையை கட்ட பயன்படுத்தபட்ட இந்த கலவை இயந்திரத்தையும் பொக்கிஷமாகவே பார்த்தனர்.

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை

பென்னி குயிக் வீட்டின் முன் உள்ள கலைவை இயந்திரத்தை கீழே கொண்டு வந்து அதனை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தொன்மை மிக்க கலவை இயந்திரத்தை பயன்படுத்த முடியாத பொருள் என்று கடந்த வருடம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முல்லை பெரியாறு அணையில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது, “அணையில் உள்ள பழமையான பொருள்கள் எவையெல்லாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறதோ, அவற்றை வகைப்படுத்தி கடந்த வருடம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த கலவை இயந்திரமும். தற்போது இந்த இயந்திரம் இங்கு இல்லை. எடுத்து சென்று விட்டார்கள்” என்கிறார்கள்.

சரி, யாருக்கு ஏலம் விடப்பட்டது என கேட்ட போது

“அந்த விவரங்களை பார்த்து சொல்கிறேன்” ” என்றார் முடித்துக்கொண்டார்.

கடல் கடந்து, மலைகள் கடந்து பயணப்பட்டு அணை கட்ட பயன்பட்ட ஒரு இயந்திரத்தை, அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வரும் ஒரு பழையான பொருளை ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக வெளிக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *