ஜார்க்கண்ட்டில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி கிராமப்புற மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் அனில் டைகர் என்பவரை, புதன்கிழமை பகல்வேளையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பைக்கில் தப்பியோடி விட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஜார்க்கண்ட் காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் குப்தா, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று கூறினார்.
இந்த நிலையில், அனில் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜகவும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.