முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு  | Muslims and Christians can adopt children says HC

1380274
Spread the love

மதுரை: ​முஸ்​லிம், கிறிஸ்தவ மதங்​களை சேர்ந்​தவர்​கள் சிறு​வர்​ நீதி சட்​டத்​தின் கீழ் குழந்​தைகளை தத்​தெடுக்​கலாம் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை​யில் முஸ்​லிம் மதத்​தைச் சேர்ந்த ஒரு​வருக்கு குழந்தை இல்​லை. அவரது சகோ​தரருக்கு 3 குழந்​தைகள் உள்​ளனர். இந்​நிலை​யில், அவரதுசகோ​தரர் அண்​மை​யில் இறந்​து​விட்​டார். சகோ​தரரின் 8 வயது மகனை தத்​தெடுக்க அவர் விருப்​பம் தெரி​வித்​தார். மகனை தத்​துக்கொடுக்க சகோ​தரரின் மனை​வி​யும் ஒப்​புக்​கொண்​டுள்​ளார்.

இதையடுத்​து, தத்​தெடுப்பு பத்​திரத்தை பதிவதற்​காக மேலூர் கிழக்கு சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் அவர் விண்​ணப்​பித்​தார். முஸ்​லிம் மதம் தத்​தெடுப்பை அனு​ம​திக்​க​வில்லை என்று கூறி, அவரது விண்​ணப்​பத்தை சார் பதி​வாளர் நிராகரித்​தார். அதை ரத்து செய்​து, தனது தத்​தெடுப்பு பத்​திரத்தை பதிவு செய்ய உத்​தர​விடக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அவர் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை விசா​ரித்து நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: கிறிஸ்​தவம், இஸ்​லாம் மதங்​கள் தத்​தெடுப்பை அங்​கீகரிக்​கா​விட்​டாலும், அந்த மதத்​தினர் சிறு​வர் நீதிச் சட்​டத்​தின் கீழ் குழந்​தைகளை தத்​தெடுக்​கலாம். இந்த வழக்​கில் குழந்​தையை தத்து கொடுப்​பவரும், தத்து எடுப்​பவரும் முஸ்​லிம்​கள். இவர்​கள் குழந்தை தத்​தெடுப்​புக்கு சிறு​வர் நீதி சட்​டம் 2015-ல் வகுக்​கப்​பட்​டுள்ள நடை​முறை​கள், விதி​கள் மற்​றும் ஒழுங்​கு​முறை​களை பின்​பற்ற வேண்​டும்.

தத்​தெடுப்பு என்​பது அந்த குழந்​தை​யின் உண்​மை​யான பெற்​றோரின் சம்​மதத்​துடன் நடை​பெற வேண்​டும். குழந்​தையை தத்​தெடுப்​பவர், மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வலர் மற்​றும் மாவட்ட ஆட்​சி​யரை அணுக வேண்​டும். மனு​தா​ரரின் தத்​தெடுப்பு விண்​ணப்​பம் அதற்​கான போர்ட்​டலில் பதிவேற்​றப்​பட்ட 3 வாரங்​களுக்​குள், குழந்தை பாது​காப்பு அலு​வலர் சரி​பார்ப்பு செயல்​முறையை முடிக்க வேண்​டும். இந்த விவ​காரம் மாவட்ட ஆட்​சி​யர் கவனத்​துக்​குச் சென்​றதும் 3 வாரங்​களில் உரிய தீர்​வு​காண வேண்​டும். மாவட்ட ஆட்​சி​யர் தத்​தெடுக்க அனு​மதி வழங்​கு​வதே போது​மானது, அதைப் பதிவு செய்​யத் தேவை​யில்​லை.

அண்​மைக்​கால​மாக தத்​தெடுப்​புக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் நீண்ட தாமதம் ஏற்​படு​வ​தாக செய்​தி​கள் வரு​கின்​றன. சமீபத்​தில் ‘தி இந்​து’ ஆங்​கில நாளிதழில், ‘இந்​தியா அதன் தத்​தெடுப்பு நடை​முறை​களை தளர்த்த வேண்​டு​மா?’ என்ற தலைப்​பில் ஒரு தலை​யங்​கம் எழுதப்​பட்​டிருந்​ததை பார்த்​தேன். அதில், குழந்​தைகள் தத்​தெடுப்​பில் உள்ள தாமதம் குறித்து விரி​வாக கூறப்​பட்​டிருந்​தது. தத்​தெடுப்பு ஒரு குழந்​தை​யின் எதிர்​கால வாழ்க்கை முறைமற்​றும் தரமான கல்​வி, சுகா​தா​ரம் உள்​ளிட்ட வாய்ப்​பு​களை வழங்​கு​கிறது. எனவே, தத்​தெடுப்பு நடை​முறை​களை சிறு​வர் நீதிச் சட்​டத்​தின் அடிப்​படை​யில் அதி​காரி​கள் விரைவுபடுத்த வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ கூறி​யுள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *