சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் மு.க. முத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார். வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க. முத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் இறந்ததாக அவரது மனைவி தெரிவித்தார்.
மு.க. முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு முத்தமிழறிஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.