‘மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு’ – சென்னை உயர் நீதிமன்றம் / Chennai high court orders in pregnancy leave for third time

Spread the love

மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, பேறுகால விடுப்பு தொடர்பான தமிழக அரசின் அடிப்படை விதியில் மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது எனக் கூறி, மனுதாரருக்கு உரிய பணப்பலன்களுடன் ஓராண்டுக்கு விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.

 சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

இனிமேல் பேறு கால விடுப்பு கோரி வழக்குகள் வராத வகையில் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் அறிவுறுத்தி இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *