மூன்று அடி உயரம் கொண்ட கணேஷ் டாக்டர் ஆன கதை|How 3 ft Ganesh passed MBBS after hurdles?

Spread the love

கல்வி மட்டும் இருந்தால் போதும். மருத்துவர் ஆக, “உயரம் ஒரு தடை இல்லை’ என்று வைராக்கிய சாதனை புரிந்துள்ளார் 3 அடி உயரம் கொண்ட கணேஷ் பரையா.

குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தை சேர்ந்த கோர்க்கி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கணேஷ் பரையா. சிறுவயதிலிருந்தே தான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்பதே இவரது கனவு.

அந்தக் கனவை அடைய இவருக்கு சமூகம், உயரம் என அடுத்தடுத்து தடைகள். இவை அனைத்துமே இவருக்கு மருத்துவராக தகுதியே இல்லை என்பதை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தன.

ஆனால், இவற்றை துளிக்கூட சட்டை செய்யாமல், மன உறுதியுடன் முயற்சித்து வந்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மூன்று அடி இருக்கும் இவருக்கு, 72% இயக்கம் சார்ந்த குறைபாடும் இருக்கிறது.

2018-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவருக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் இவருடைய உயரம் மற்றும் 72% இயக்கம் சார்ந்த குறைபாடு காரணம் காட்டி எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு சீட் தர மறுத்துள்ளது.

இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் கணேஷ். ஆனால், அங்கே அவருக்கு நீதி கிடைக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *