மெட்ரோ சேவைக்கு பயணிகள் 5-க்கு 4.3 மதிப்பெண் வழங்கல்: கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ் ஆய்வில் தகவல் | passengers gave for metro service a score of 4.3 out of 5

1380368
Spread the love

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை​களுக்​கான ஒட்​டு மொத்த பயணி​களின் திருப்தி மதிப்​பெண் 5-க்கு 4.3 ஆக இருப்பதாக ‘கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ்’ ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ் (Community of Metros) என்​பது உலகம் முழு​வதும் உள்ள நகர்ப்​புற மெட்ரோ ரயில் சேவை​களின் செயல்​பாடு​களை ஒப்​பிட்​டு, தரநிலைகளை நிர்​ண​யிக்​கும் ஒரு சர்​வ​தேச அமைப்பு ஆகும்.

இந்த அமைப்​பில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் 2024-ம் ஆண்​டில் புதிய உறுப்​பின​ராகச் சேர்ந்​தது. உலகத் தரத்​திலான செயல்​பாடுகளை அடைவதற்​கும், முன்​னேற்றங்​களை மேற்​கொள்​வதற்​கும் இது முக்​கிய கவனம் செலுத்துகிறது. இதற்​கிடை​யில், கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ் கடந்த ஆகஸ்டில் இணை​யதளம் மூல​மாக பயணி​கள் திருப்தி குறித்த கருத்​துப் பதிவை நடத்​தி​யது.

இதில் சுமார் 6,500 வாடிக்​கை​யாளர்​களிடம் இருந்து பதில்​களைப் பெற்று சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் முதலிடம் பிடித்​துள்​ளது. இந்​தக் கணக்​கெடுப்பு பற்​றிய விளம்​பரம் சுவரொட்​டிகள், இணை​யதளம் மற்​றும் சமூக ஊடகங்​கள் மூலம் செய்​யப்​பட்​டது. இந்​தக் கணக்​கெடுப்​பானது சேவைத் தரம், அணுகல், கிடைக்​கும் தன்​மை, நம்​பகத்​தன்​மை, பாது​காப்பு ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்​டிருந்​தது.

இந்த கணக்​கெடுப்​பில் உலகெங்​கிலும் உள்ள 32 மெட்ரோ ரயில் நிறு​வனங்​கள் பங்​கேற்​றன. இந்​நிலை​யில், இந்த ஆய்​வின் முடிவு​கள் தற்போது அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. சென்னை மெட்ரோ ரயில் சேவை​களுக்​கான ஒட்​டு மொத்த வாடிக்​கை​யாளர் திருப்தி மதிப்​பெண் 5-க்கு 4.3 ஆக இருப்​ப​தாகத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆய்வு அறிக்கை விவரம்: இந்த ஆய்​வுக்​குப் பதிலளித்​தவர்​களில் சுமார் 64 சதவீதம் பேர் ஆண்​கள், 33 சதவீதம் பேர் பெண்​கள் மற்​றும் 3 சதவீதம் பேர் மற்​றவர்​கள் ஆவர். மேலும் பெரும்​பாலான பயணி​கள் இளம் வயதினர் (30 வயதுக்கு உட்​பட்​ட​வர்​கள்). பலர் பணி நிமித்தமாக மெட்ரோ ரயில்​களை பயன்​படுத்​துகின்​றனர்.

பயணி​கள் கட்​ட​ணம் செலுத்​தும் முறை​கள், கூடு​தல் இட வசதி, மெட்ரோ நிலை​யங்களுக்கு இடையே​யான இணைப்பு வசதி மற்றும் நிலை​யங்​களை எளி​தாக அணுகும் வசதி ஆகிய​வற்​றில் மேம்​பாடு​களை எதிர்​பார்க்​கின்​றனர். இவ்​வாறு அதில் தெரிய​வந்துள்​ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறுகை​யில், “பயணி​களின் மதிப்​புமிக்க கருத்துகளுக்கு நன்​றி. பயணி​களின் எதிர்​பார்ப்​பு​களைப் பூர்த்​தி செய்ய, தொடர்ச்​சி​யான மேம்​பாடு​களைச் செய்ய உறுதி அளிக்கிறோம்” என்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *