மெட்ரோ பணிகளால் கட்டிடத்துக்கு ஆபத்து: மயிலாப்பூரில் தனியார் பள்ளி முன் பெற்றோர் முற்றுகை | Parents protest in front private school in mylapore

1322765.jpg
Spread the love

சென்னை: மெட்ரோ ரயில் பணிகளால் பள்ளிக் கட்டிடத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதைக் கவனிக்கக் கோரி மயிலாப்பூரில் தனியார் பள்ளி முன்பு பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி வளாகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான வேலை நடைபெற்று வருகிறது.

இதனால், பள்ளி கட்டிடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியதோடு, பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு இன்று (அக்.07) காலை திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரப்பான நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *