மெட்ரோ பணி​யில் இருந்த ராட்சத கிரேன் பழுதால் போக்குவரத்து நெரிசல் | Traffic jam due to breakdown of giant crane during metro work

1370445
Spread the love

சென்னை: நுங்​கம்​பாக்​கம் பகு​தி​யில் மெட்ரோ ரயில் பணி​யில் ஈடு​பட்​டிருந்த ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்​பட்​டது. இதனால், உத்​தமர் காந்தி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டு, வாகன ஓட்​டிகள் அவதிப்​பட்​டனர்.

சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் 116.1 கி.மீ. தொலை​வுக்கு 3 வழித்​தடங்​களில் பணி​கள் நடை​பெறுகின்​றன. இவற்​றில், மாதவரம் – சிறுசேரி சிப்​காட் வரையி​லான 45.4 கி.மீ. தொலைவு வரை 3-வது வழித்​தடத்​தில் மெட்ரோ ரயில் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

28 சுரங்க மெட்ரோ ரயில் நிலை​யங்​களும், 19 உயர்​மட்ட மெட்ரோ நிலை​யங்​களும் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. கெல்​லீஸ் முதல் தரமணி வரையி​லான 12 கி.மீ. தொலைவு வரை சுரங்​கப்​பாதை கட்​டு​மானப் பணி​கள் நடந்து வரு​கின்​றன. எட்டு சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

இது​போல, பல்​வேறு இடங்​களில் ராட்சத கிரேன்​களும் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், நுங்​கம்​பாக்​கம் பகுதி​யில் தெரேசா சர்ச் அரு​கில் மெட்ரோ ரயில் திட்​டப் பணி​யில் ஈடு​பட்ட ராட்சத கிரேன் நேற்று காலை​யில் திடீரென பழுது ஏற்பட்​டது. இதையடுத்​து, சம்பவ இடத்​துக்கு வந்த மெட்ரோ ரயில் தொழில்​நுட்ப பணி​யாளர்​கள் இரண்டு மணிநேரம் போராடி பழுதை சரி செய்​தனர்.

ராட்சத கிரேன் பழு​தாகி சாலை​யில் நின்​ற​தால், உத்​தமர் காந்தி சாலை​யில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்​லும் வழி​யில் நேற்று காலை கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. வாக​னங்​கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்​ற​தால், வாகன ஓட்​டிகள்​ கடும் அவதிப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *