மெட்ரோ ரயில்களில் 29.87 கோடி பேர் பயணம்!

Dinamani2fimport2f20192f112f132foriginal2fmetro Chennai Track.jpg
Spread the love

சென்னை: சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மெட்ரோ ரயில்களில் 29 கோடியே 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூா் இடையேயான சேவையை 2015 ஜூன் 29-ஆம் தேதி அப்போதைய முதல்வர் முதல்வா் ஜெயலலிதா தொடங்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து சென்னை விமான நிலையம்-விம்கோ நகா், சென்ட்ரல்-பரங்கிமலை வழித்தடங்களில் சுமாா் 55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை நீடிக்கப்பட்டது.

சென்னை மக்களிடையே மெட்ரோ ரயில் சேவை சிறப்பான வரவேற்பபை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ரூ.63,246 கோடியில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலங்கரை விளக்கம்-பூந்தமில்லி புறவழிச்சாலை 26.1 கிலோ மீட்டர், மாதவரம்-சிறுசேரி சிப்காட் 45.8 கிலோ மீட்டர், மாதவரம்-சோழிங்நல்லூர் வரை 47 கிலோ மீட்டர் ென 11.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழித்தடங்கள் அமைய உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி கடந்த சனிக்கிழமையுடன் 9 ஆண்டு நிறைவடைந்து பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 9 ஆண்டுகளில் மெட்ரோ ரயிலில் 29 கோடியே 87 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனா் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு மெட்ரோ ரயில்களில் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, கியூ ஆா் குறியீடு மூலம் பயணம் செய்தால் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *