மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் பனகல் பார்க்கில் போக்குவரத்து மாற்றம் | Traffic diversion at Panagal Park

1340865.jpg
Spread the love

சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பனகல் பார்க் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள், பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் அமைப்புக்கான கட்டுமான பணிகள் வெங்கட் நாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். திருமண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால், 25-ம் தேதி (நாளை) முதல் டிச.1-ம் தேதி வரை ஒருவாரம் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கட் நாராயணா சாலைக்கு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக சென்று வெங்கட்நாராயணா சாலையை அடைந்து, தங்கள் இலக்கை அடையலாம். மேலும், அப்பகுதி மக்களின் வசதிக்காக வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். திருமண மண்டபம் வரையில் இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *