மெத்தனால் விஷமுறிவு மருந்து இல்லாதது உயிர்பலி அதிகரிக்க காரணமா?

Gqsbmnfxkaaip7q
Spread the love

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

விஷமுறிவு மருந்து

இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏராளமானோர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது மெத்தானல் விஷமுறிவு மருந்து இல்லை என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். மேலும் இந்த விஷமுறிவு மருந்து இல்லாததே உயிர் பலி அதிகரிக்க காரணமாக இருந்நததாகவும் தெரிவித்து உள்ளார்.

Edappdai
இது தொடர்பாக அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கருணாபுரம் கள்ளச்சாராய மரணச் செய்தியறிந்தவுடனே, கடந்த 20-ம் தேதி காலை கள்ளக்குறிச்சி விரைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சை முறைகளை கேட்டறிந்தேன். 34 உயிர்களை இழந்திருந்த அந்த நிமிடம்வரை, “மெத்தனால் விஷ முறிவு மருந்தான உயிர்க் காக்கும் Fomepizole மருத்துவமனையில் இருப்பு இல்லை” என்கிற வேதனையை செய்தியாளர்களிடத்தில் பகிர்ந்திருந்தேன்.

தேசிய தேர்வு முகமை தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம்

இதனை, அங்கு பணியில் இருந்த மருத்துவர்களே கவலையுடன் தெரிவித்தனர். நான் சுட்டிக்காட்டிய பிறகே நேற்று (21ம் தேதி) அவசர அவசரமாக விஷ முறிவு மருந்தான Fomepizole ஆர்டர் செய்யப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தபிறகு இன்று (22ம் தேதி) மும்பையில் இருந்து தருவிக்கப்பட்ட Fomepizole மருந்துகள் விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. “உண்மையை மூடி மறைத்து இதனை எப்படியாவது மடைமாற்றி திசை திருப்பி விடலாம்” என நினைக்கும் அரசுக்கு சவால் விடுகிறேன்.

Hospi

கையிருப்பு பட்டியல் வெள்ளை அறிக்கை

ஜூன் 20-ம் தேதி அரசு மருத்துவமனைகளில் எவ்வளவு “Fomepizole” மருந்துகள் கையிருப்பில் இருந்தன என்பதற்கான ஆதாரத்தை வெளியிட தயாரா? ஜூன் 20 உயிர்க் காக்கும் விஷ முறிவு மருந்தான Fomepizole பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கான Patient Case Sheet, Hospital Drug Inventory records மற்றும் TNMSC கையிருப்பு பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா? .

‘ஒவ்வொரு நொடியும் ஓர் உயிரைக் காக்க போர்க்கால சிகிச்சை’ அளிக்கப்பட வேண்டிய பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டு, 54 உயிர்களை இழந்த பிறகும்; வீண் விவாதத்தை தொடராமல், எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் கேட்டு உயிரைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

இதுவரை 11 பேர் கைது

இதற்கிடையே கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் தொடர்புடையதாக 11 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் 3 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:

நடிகர் விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *