மெஸ்ஸி மீது எம்பாப்பே பொறாமைப்பட்டார்: நெய்மர்

Dinamani2f2025 01 172ftzuv0g472fsnapinst.app38633938486414059844983746046413370610400n1080.jpg
Spread the love

பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி மீது ரியல் மாட்ரிட் அணி வீரர் கிளியன் எம்பாப்பே பொறாமையில் இருந்ததாக கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.

பிரேசிலைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் ரொமாரியோ தொகுத்து வழங்கிய பாட்கேஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (ஜன. 17) பேசிய நெய்மர் (32) முக்கிய போட்டிகளில் வீரர்களுக்கு இடையிலான சச்சரவுகள் பிஎஸ்ஜி அணி விளையாடிய பெரிய போட்டிகளைப் பாதித்ததாகத் தெரிவித்தார்.

ரியல் மாட்ரிட் அணியில் எம்பாப்பே இணைந்த பின்னர் எரிச்சலூட்டும்படி நடந்து கொள்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த நெய்மர், “இல்லை. அவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. எனக்கும் அவருக்கும் சில விஷயங்கள் நடந்துள்ளன. நாங்கள் சிறிதாக சண்டையிட்டுள்ளோம். ஆனால், அவர் அணிக்கு மிக முக்கியமானவராக இருந்தார். நான் அவரை கோல்டன் பாய் என்றே அழைப்பேன்.

இதையும் படிக்க | வரலாற்று சாதனை..! 2034 வரை விளையாட ஒப்பந்தமான கால்பந்து வீரர்!

எங்களுக்குள் சில ஆண்டுகள் நல்ல கூட்டணி அமைந்தது. ஆனால் பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸி இணைந்த பிறகு எம்பாப்பேக்கு கொஞ்சம் பொறாமை ஏற்பட்டது. அவரை என்னிடமிருந்து பிரிப்பதை அவர் விரும்பவில்லை. அதன் பின்னர் சில சண்டைகள் நடந்தன. அவர் நடத்தையிலும் மாற்றம் தெரிந்தது” என்று எம்பாப்பே குறித்து பேசினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மொனாக்கோ அணியிலிருந்து பிஎஸ்ஜி அணியில் எம்பாப்பே இணைந்தார். அதே ஆண்டு பார்சிலோனா அணியிலிருந்த நெய்மர் பிஎஸ்ஜி அணியில் இணைந்தார். இது கால்பந்தாட்ட வரலாற்றில் பெரிய மாற்றமாகப் பார்க்கப்பட்டது.

பிஎஸ்ஜி அணி முதல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லவேண்டும் என்ற காரணத்திற்காக இருவரும் அந்த அணியில் இணைக்கப்பட்டனர். ஆனால், இதுவரை அந்த அணி கோப்பையை வெல்லவில்லை. அணியில் உள்ள சச்சரவுகள் காரணமாகவே கோப்பை வெல்ல முடியவில்லையென எனக் கூறிய நெய்மர் எவருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

இதையும் படிக்க | அஜித் பங்கேற்கும் அடுத்த ரேஸ் – இந்த முறை போர்ச்சுகலில்!

”இதுபோன்ற சச்சரவுகள் (ஈகோ) இருப்பது நல்லது. ஆனால், நாம் தனியாக விளையாடி ஜெயிக்க முடியாது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். உங்களின் பக்கத்தில் இன்னொருவர் வேண்டும். பெரிய சச்சரவுகள் எல்லா இடத்திலும் உள்ளன. அனைவரும் இணைந்து ஓடவில்லை என்றால் எதையும் விளையாட்டில் ஜெயிக்க முடியாது” என்று நெய்மர் கூறினார்.

நெய்மரின் கருத்துக்கு மெஸ்ஸி, எம்பாப்பே ஆகியோர் எந்த எதிர்வினையும் தற்போது வரை கொடுக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *