என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் டிவெண்டி 20 கட்சி இம்முறை நான்கு சினிமா பிரபலங்களையும் ஒரு சோசியல் மீடியா பிரபலத்தையும் தேர்தலில் களமிறக்கியிருக்கிறது.
இக்கட்சி சார்பாக, தாமரை சின்னத்தில் திருப்பூணித்துரா தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார் நடிகை அஞ்சலி நாயர். நடிகை லக்ஷ்மி ப்ரியா, பெரும்பாவூர் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார்.
நடிகை வீணா நாயர் எட்டுமானூர் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். சோசியல் மீடியா பிரபலமான ப்ரோமி குரியாகோஸ் அங்கமாலி தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார்.
முன்னாள் ராணுவ அதிகாரியும், திரைப்பட இயக்குநருமான மேஜர் ரவி இம்முறை தேர்தல் அரசியலுக்குள் குதித்திருக்கிறார். பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒட்டப்பாலம் தொகுதியில் இவர் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார்.
பிரபல நகைச்சுவை நடிகரான ரமேஷ் பிஷாரடி காங்கிரஸ் சார்பாக பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். நடிகர் சுதீர் கரமனா, இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகத் திருவனந்தபுரத்தில் போட்டியிட்டிருக்கிறார்.
இவர்களைத் தாண்டி சில பிக் பாஸ் பிரபலங்கள், தொலைக்காட்சி முகங்களிலும் இம்முறை கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள்.