மேட்டூரில் தண்ணீர் திறப்பு 40 ஆயிரம் கனஅடியாக குறைப்பு | Water release in Mettur reduced to 40 thousand cubic feet

1371377
Spread the love

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை கடந்த 25-ம் தேதி நடப்பாண்டில் 4-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,10,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 40,500 கனஅடி யாக குறைந்தது.

அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.10 லட்சம் கனஅடியிலிருந்து நேற்று இரவு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 120 அடியாக இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1.25 லட்சம் கனஅடியாக பதிவான நீர்வரத்து நேற்று மாலை 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *