மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 23,300 கன அடியாக குறைந்தது.
நீர்வரத்து சரிந்த காரணத்தால் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
கிழக்கு – மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு மதகுகள் 2 நாள்களுக்கு பிறகு மூடப்பட்டன.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் இன்று 3-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.