மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

Dinamani2f2024 09 192fafdvirmy2fmettur.jpg
Spread the love

கர்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைத்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,153 கன அடியாகச் சரிந்துள்ளது.

இரு மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 94.72 அடியிலிருந்து 94.09 அடியாகச் சரிந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,831 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,153 கன அடியாகச் சரிந்தது.

அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் நீர் இருப்பு 57.45 டிஎம்சியாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *