மேட்டூர் அணைக்கு 20,450 கனஅடி நீர்வரத்து | Mettur Dam receives 20450 cubic feet of water

1370550
Spread the love

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 21,514 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் நீர்வரத்து 20,450 கன அடியாகக் குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நேற்று மதியம் 12 மணி முதல் விநாடிக்கு 16,000 கனஅடியிலிருந்து 18,000 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி திறக்கப்படுகிறது.அணையின் நீர்மட்டம் 119.97 அடியாகவும், நீர் இருப்பு 93.42 டிஎம்சியாகவும் உள்ளது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை முழு கொள்ளளவான 120 அடியை மீண்டும் எட்ட வாய்ப்புள்ளது. எனவே, 16 கண் மதகுகள் வழியாக எந்நேரமும் உபரிநீர் வெளியேற்றப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *