மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: 16,000 கனஅடியாக குறைப்பு | Water released from Mettur Dam

1372200
Spread the love

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர அணைக்கு நேற்று முன்​தினம் மாலை 7,769 கனஅடி​யாக​வும், நேற்று காலை 7,591 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 12,614 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணையி​லிருந்து டெல்டா பாசனத்​துக்​கான நீர்​திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடியி​லிருந்து 16,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அணைக்கு நீர்​வரத்தை விட தண்​ணீர் திறப்பு அதி​க​மாக உள்​ள​தால், அணை​யின் நீர்​மட்​டம் குறை​யத் தொடங்​கி​யுள்​ளது. அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 118.70 அடி​யாக​வும், நீர் இருப்பு 91.41 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

ஒகேனக்​கல்​லில்​… தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 8,000 கனஅடி​யாக பதி​வான நீர் வரத்து நேற்று காலை 9,500 கனஅடி​யாக​வும், பகல் 1 மணி​யள​வில் 16 ஆயிரம் கனஅடி​யாக​வும், மாலை 6 மணி​யள​வில் 18 ஆயிரம் கனஅடி​யாக​வும் அதிகரித்​தது.

தமிழகத்​தில் காவிரி ஆறு பாயும் வனப் பகு​தி​களில் கடந்த சில நாட்​களில் பெய்த கனமழை காரண​மாக ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து சற்றே அதி​கரித்​துள்​ள​தாக நீர்​வளத்​ துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *