அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை இரவு 90.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 92.62 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 55.69 டி.எம்.சியாக உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு முழுமையாக வந்து சேர்ந்தால் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயரம் என்று நீர்வளத்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் அதிகரிக்கும் என்பதால் அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.