மேட்டூர் நீர்மட்டம் 5 நாளாக முழு கொள்ளளவில் நீடிப்பு | Mettur water level remains at full capacity for 5 days

1374233
Spread the love

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணை நீர்​மட்​டம் கடந்த 5 நாட்​களாக முழு கொள்​ளள​வான 120 அடி​யில் நீடிக்​கிறது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தும், குறைந்​தும் காணப்​படு​கிறது. அணைக்கு கடந்த சில நாட்​களாக நீர்​வரத்து அதி​கரித்​திருந்த நிலை​யில் மீண்​டும் குறை​யத் தொடங்​கி​யுள்​ளது.

அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 19,850 கன அடி​யாக இருந்த நீர்​வரத்து படிப்​படி​யாக குறைந்து நேற்று காலை 10,850 கனஅடியாக இருந்​தது. காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்​ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

அதே​போல, கிழக்​கு, மேற்கு கால்​வாய் பாசனத்​துக்கு 850 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அணைக்கு வரும் நீரின் அளவும், வெளி​யேற்​றப்​படும் நீரின் அளவும் சமமாக உள்​ளது.

இதன் காரண​மாக கடந்த 5 நாட்​களாக அணை​யின் நீர்​மட்​டம் முழு கொள்​ளள​வான 120 அடி​யில் நீடிக்​கிறது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 9,500 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 16 ஆயிரம் கனஅடி​யாக அதி​கரித்​தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *