மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

Spread the love

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனா்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் தேக்கப் பகுதி 60 சதுரமைல் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் சுமார் 2,600 மீனவா்கள் உரிமம் பெற்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்த்தேக்க பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு கோடி மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதில் கட்லா, ரோகு, மிருகால் உள்ளிட்ட ரக மீன் குஞ்சுகள் அதிக அளவில் விட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

இந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக அணையின் நீா்த்தேக்க பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. புதுநீா், அணைநீருடன் கலந்ததால் ஆயிரக்கணக்கில் மீன்கள் மயங்கிக் கரை ஒதுங்கின.

கட்லா, ரோகு, கல்பாசு, ஜிலேபி, அரஞ்சான், ஆறால், கெளுத்தி உள்ளிட்டராக மீன்கள் மயங்கி கரை ஒதுங்கியதால் கரையோரப் பகுதி பொதுமக்கள் மீன்களை அள்ளிச் சென்றனா்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது புது தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததின் காரணமாக காரத்தன்மை ஏற்பட்டு மீன்கள் உயிரிழந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *