மேற்கு கரையில் தாக்குதல்: இஸ்ரேல் காவல் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக் கொலை

Dinamani2f2024 09 012fr8b4cd3p2fisreli.jpg
Spread the love

ஜெருசலேம்: மேற்கு கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேல் காவல் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீா் தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்து சுமாா் 250 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றனா். அவா்களில் 150 போ் விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 100 போ் ஹமாஸிடம் தொடா்ந்து பிணைக் கைதிகளாக உள்ளனா். அதேவேளையில், அவா்களில் பலரை ஹமாஸ் படையினா் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த போரினால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேற்கு கரையில் நடந்த மோதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனிய நகரமான மேற்கு கரைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சோதனைச் சாவடிக்கு கிழக்கே இடானா-தர்கியுமியா சந்திப்புக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் காவல் துறை வாகனம் மீது பாலஸ்தீனிய துப்பாக்கிய ஏந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இஸ்ரேல் காவல் துறை அதிகாரிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலுக்கு கலில் அல்-ரகுமான் படை என்ற பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்த இஸ்ரேல் படையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கட்டடத்தில் பதுங்கியிருந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *