தனித்து களம் காணும் காங்கிரஸ்
மறுபக்கம் கடந்த 2021 தேர்தலில் 77 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த பாஜக, இந்த முறை ‘ Asali Poriborton’ (உண்மையான மாற்றம்) என்ற முழக்கத்துடன் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
மேற்குவங்க அரசியலில் 34 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாக இருந்த இடதுசாரிகள், கடந்த சில தேர்தல்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்து இருக்கும் இடமே தெரியாமல் இருக்கின்றனர்.
இந்தச் சூழலில்தான் கடந்த தேர்தல்களில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, 294 தொகுதிகளிலும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து களம் காண முடிவு செய்திருக்கிறது.

வாக்கு வங்கி குறைவு
டெல்லியில் மேற்குவங்க காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2001 தேர்தலில் 17 இடங்களில் வென்ற காங்கிரஸ் 2006-ல் 21 இடங்களையும், 2011-ல் 41 இடங்களையும், 2016-ல் 44 இடங்களையும் வென்றிருந்த நிலையில், 2021-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. தவிர கட்சியின் வாக்கு வங்கியும் 3.03 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.