மேற்கு வங்கம்:எல்லைகளில் ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி; பசு கடத்தல் தடை: பாஜகவின் தேர்தல் அறிக்கை |Uniform Civil Code will be introduced in West Bengal within six months says amit shah

Spread the love

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரம், தலைவர்களின் சுற்றுப்பயணம், தேர்தல் வாக்குறுதி என தூள்பறக்கிறது தேர்தல் களம். இந்தமுறை எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற துடிப்பில் பா.ஜ.க-வும், தொடர்ந்து அரியணையில் அமர்ந்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் எனவும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

இந்த நிலையில், இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையான ‘சங்கல்ப பத்ரா’வை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, “மதம், சாதி வேறுபாடின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுத்தல் ஆகிய விவகாரங்களில் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கமாகும். ஏற்கெனவே பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *