மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாகிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் இன்று (ஜன.14) காலை அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங். கட்சியின் நிர்வாகிகளான ஹசன் ஷேக், பக்குல் ஷேக் மற்றும் அவரது உதவியாளரான எசாருதீன் ஷேக் ஆகிய மூன்று பேரும் நயாபஸ்தி பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்கள் மூவரின் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், ஹசன் ஷேகின் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் மற்ற இருவரும் காயமடைந்த நிலையில் மூவரும் மீட்கப்பட்டு மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஹசன் சேக் சிகிச்சைப் பலனின்றி பலியானார்.
இதையும் படிக்க: மோசமான வானிலை: ராஞ்சியில் ஏராளமான விமானங்கள் தாமதம்!