சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மேலநெட்டூர் பெரிய கண்மாயில் உள்ள மரங்கள் சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் கிராம மக்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலநெட்டூர் 100 ஏக்கர் பரப்பளவிலான இந்த கண்மாய் மூலம் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கண்மாயில் நாணல், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் கண்மாயில் இருந்த நாணல் புற்களும் மரங்களும் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. ஆடிமாதக் காற்று அடித்ததால் தீ வேகமாக பரவியது.