மேலும் ஒருவர் உடல் மீட்பு, பலி 5ஆனது!

Dinamani2f2025 03 022fdafkmdrf2frescued.jpg
Spread the love

உத்தரகண்டில் பணிச்சரிவில் காணாமல் போன மேலும் ஒருவரின் உடல் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதன் மூலம் பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன எஞ்சிய 3 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இன்று மீட்கப்பட்ட உடல் டெஹ்ராடூன் கொண்டு செல்லப்படுகிறது.

ராணுவம், விமானப்படை, என்டிஆர்எஃப், எஸ்டிஆர்எஃப் உள்ளிட்ட பல படைகள் இணைந்து காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

காணாமல் போன தொழிலாளர்களைக் கண்டறிய தரையில் ஊடுருவக்கூடிய ரேடார், தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

அப்பகுதியில் வானிலை மேம்பட்டு வருவதாகவும், ஆனால் பனிச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *