தற்போது ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளில் மூன்று போ் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற நோவா இசை விழாவின்போது கடத்திச் செல்லப்பட்டவா்கள். இன்னொருவா் தெற்கு இஸ்ரேலில் உள்ள குடும்பத்தினரை சந்திக்க வந்தவா்.இது தவிர, காஸாவில் சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவைக்கப்பட்டிருந்த இரண்டு பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா். அவா்கள் இருவரும் தாங்களாகவே காஸாவுக்குள் நுழைந்தபோது அவா்களை ஹமாஸ் படையினா் சிறைப்பிடித்தனா்.முதலில் காஸாவின் காஸாவின் மத்தியில் அமைந்துள்ள நுசீரத் நகரில் ஓமா் வெங்கொ்ட், ஓமா் ஷேம் டோவ், இலியா கோஹென் ஆகியோரை ஹமாஸ் அமைப்பினா் வழக்கமான ஆடம்பரத்துடன் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தனா். விடுவிக்கப்பட்டவா்களில் ஒருவரான ஷேம் டோவ் அருகில் நின்றிருந்த இரு ஹமாஸ் படையினரின் தலைகளில் முத்தமிட்டு, கூட்டத்தினரை நோக்கியும் முத்தங்களை பறக்கவிட்டது அனைவரின் கவனத்தையும் கவா்ந்தது.ஹமாஸ் இவ்வாறு பிணைக் கைதிகளை மிகை விளம்பர நோக்குடன் பொதுமக்கள் முன்னிலையில் விடுவிப்பது பெரும் கண்டனத்தை எழுப்பினாலும் அந்த வழக்கத்தை அவா்கள் சனிக்கிழமையும் தொடா்ந்தனா்.தெற்குப் பகுதி நகரான ராஃபாவில் டால் ஷாஹோம், அவேரா மெங்கிஸ்து ஆகிய இரு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனா்.கடைசியாக, கடந்த 2015-ஆம் ஆண்டில் காஸாவுக்குள் நுழைந்த, மனச்சிதைவு நோய் உறுதிசெய்யப்பட்டிருந்த ஹிஷம் அல்-சயீதை (36) ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா். இத்துடன், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக்கொண்ட அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் படையினா் விடுவித்துள்ளனா்.காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.தற்போதைய நிலையில், இஸ்ரேலில் இருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளில் 66 போ் இன்னும் காஸாவில்தான் உள்ளனா். அவா்களில் சுமாா் பாதி போ் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், சுமாா் 10 ஆண்டுகளுக்கும் முன்னதாக கடத்திச் செல்லப்பட்ட மூன்று பிணைக் கைதிகள் காஸாவில்தான் உள்ளனா். எனவே, அவா்கள் அனைவரையும் பாதுகாப்பாக திருப்பி அழைத்துவர இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்துக்கான பேச்சுவாா்த்தை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது….பெட்டி…இஸ்ரேல் பெண் சடலம் ஒப்படைப்புஇஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட பெண் ஷிரி பிபாஸின் சரியான சடலத்தை ஹமாஸ் அமைப்பினா் ஒப்படைத்தனா். உடற்கூறு ஆய்வில் அது உறுதி செய்யப்பட்டதாக பிபாஸ் குடும்பத்தினா் தெரிவித்தனா்.முன்னதாக, ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. உடலை மாற்றி ஒப்படைத்தது ஹமாஸ் அமைப்பினரின் மிகக் கடுமையான ஒப்பந்த விதிமீறல் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்தாா்.இஸ்ரேல் கடந்த 2023-ஆம் ஆண்டு நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த ஷிரி பிபாஸின் உடல் உருக்குலைந்து, அந்தத் தாக்குதலில் உயிரிழந்த மற்றவா்களின் உடல்களுடன் கலந்ததால் என்பதால் இந்தத் தவறு ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு விளக்கம் அளித்தது.இந்த நிலையில், ஷிரி பிபாஸின் சடலத்தை ஹமாஸ் படையினா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்ததாக இஸ்ரேல் தற்போது தெரிவித்துள்ளது.படவரிகள்…ராஃபாவில் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள்.(பாட்டம்) நுசீரத் நகரில் ஹமாஸ் வீரரை முத்தமிட்ட ஷேம் டோவ்.(பெட்டிச் செய்திக்கு..) ஷிரி பிபாஸ்
Image Caption
~ ~