மேஷம் : `ஏழரைச் சனி ஆரம்பம், என்றாலும்.!' | வாக்கிய சனிப்பெயர்ச்சி 2026 பலன்கள்

Spread the love

மேஷத்துக்கு அதிபதி செவ்வாய். சூரியனுக்கு அது உச்ச வீடு. இந்த இருவரது இயல்புகளும் மேஷத்தில் பிறந்தவர்களிடம் தென்படும். இன்ப – துன்பங்களில் பதறாத மனமும் ஆராயாமல் சட்டென முடிவெடுக்கும் குணமும் கொண்டவர்கள் நீங்கள். ஆளுமையும், தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும் உங்களின் பலம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:

1. தற்போது உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம் என்றாலும், ராசிக்கு விரய வீட்டில் அமரும் சனி, நிச்சயம் யோக பலனையே கொடுப்பார். 12-ல் மறைவதால், இழுபறியான பல காரியங்கள் இனி விரைந்து முடியும்.

2. குடும்பத்தில் கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். அதேநேரம், சொந்தபந்தங்களின் ஆதரவு இருந்தாலும், அவர்களால் செலவுகளும் இருக்கும்.

3. சனிப்பெயர்ச்சியின் தொடக்கக் காலத்தில் ஒருசிலருக்கு பெரிய பதவிகள் தேடி வர வாய்ப்புகள் உண்டு. திருமணத்தில் இருந்த சிரமங்கள் நீங்கி சுபகாரிய பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும். பணவரவு அதிகரிக்கும்.

4. சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் 2.4.2026 முதல் 14.4.2027 வரையிலான காலத்தில் எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். அரசுக் காரியங்களில் தாமதம் உண்டு.

சனி பகவான்

5. சனிபகவான் 28.07.2027 முதல் 13.12.2027 வரை வக்ரத்தில் செல்வதால், திடீர் யோகம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். அடகிலிருந்த நகைகளை எல்லாம் மீட்பீர்கள்.

6. அடுத்த வருடம் முதல் நான்கு மாதங்கள் உங்களுக்குச் சாதக மான பலன்கள் அமையும். உங்களின் தைரியத்திற்கும், அலைச்சலுக்கும் உரியவரான புதனின் நட்சத்திரமான ரேவதியில் சனி செல்வதால், வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள்.

7. இதுவரை உங்கள் ராசியின் மீது விழுந்த சனியின் பார்வை இனி விலகுவதால், பேச்சில் கம்பீரம் இருக்கும். தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கும் மாறுபட்ட அணுகு முறையால் பேசித் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள்.

8. சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் துயரிலிருந்து மீண்டு வருவீர்கள். இதுவரையிலும் உங்கள் மனதை நெருடிக்கொண்டிருந்த நெடுநாள் கடன் ஒன்று அடைபட, புது வழி பிறக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. தாய்வழியில் சொத்து வரும். உச்சத்தில் இருக்கும் வி.ஐ.பிகளின் நட்பும் ஆதரவும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

9. சனி பகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பண வரவுக்குக் குறைவிருக்காது. எனினும் வீண் செலவுகள் கூடாது. கண் தொடர்பான பிரச்னைகள் வரலாம். 9-ம் வீட்டைப் பார்ப்பதால், தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.

10. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையாட்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

11. உத்தியோகஸ்தர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரியின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கணினித்துறையினரே, பதவி – சம்பள உயர்வுகள் தடைப்பட்டாலும், போராடிப் பெறுவீர்கள்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *