மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் குவித்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஷார்ஜாவில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: ஆட்டநேர முடிவில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: ரச்சின் ரவீந்திரா
நியூசிலாந்து – 128/9
நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜியார்ஜியா பிளிம்மர் 33 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து, சுஸி பேட்ஸ் 26 ரன்களும், இஸபெல்லா கேஸ் 20 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டீன்ரா டாட்டின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஃபி ஃப்ளெட்சர் 2 விக்கெட்டுகளையும், கரிஸ்மா மற்றும் ஆலியா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!
129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.