மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை!

Dinamani2f2024 10 172fko2yp6oh2fsri Lanka.jpg
Spread the love

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி டம்புல்லாவில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

இதையும் படிக்க: 46 ரன்களுக்கு ஆல் அவுட்; ரோஹித் சர்மா கூறியது என்ன?

மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பௌவல் 37 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, குடகேஷ் மோட்டி 32 ரன்களும், பிரண்டன் கிங் 23 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் வனிந்து ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நுவான் துஷாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடரைக் கைப்பற்றிய இலங்கை

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக 68 ரன்கள் (50 பந்துகள்) (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தும், குசல் பெரேரா 55 ரன்கள் (36 பந்துகள்) (7 பவுண்டரிகள்) எடுத்தும் களத்தில் இருந்தனர். பதும் நிசங்கா 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி! இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது தெ.ஆ.!

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இருதரப்பு டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் முறையாக இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் ஆட்ட நாயகனாகவும், பதும் நிசங்கா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *