மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.
செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் இயக்குநர் மைல்ஸ் பாஸ்கோம்பே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டெஸ்ட் அணிக்கு அதிகாரபூர்வமாக டேரன் சமி பொறுப்பேற்பார் என்றும், அதே நேரத்தில் டி20, ஒருநாள் அணிகளுக்கான பயிற்சியாளர் பொறுப்புகளை தொடர்ந்து வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரே கோலிக்கு பதிலாக டேரன் சமி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2 டி20 உலகக் கோப்பைப் பட்டங்களைப் பெற்றுத் தந்த டேரன் சமி, 2023 ஆம் ஆண்டு டி20, ஒருநாள் அணிகளுக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றப்பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.