‘மே 10 ஆம் தேதி விஜய் முதல்வர்; அதிமுகவை விமர்சிக்காதீங்க!’ – தவெக ஸ்கெட்ச் |DMK District Secretaries Are Thieves; Vijay to Become Chief Minister on May 10, Says TVK

Spread the love

டெல்லிதான் தமிழ்நாடானு வசனம் பேசுற படம் எடுப்பாங்க. ஆனா, அந்தப் படக்குழுவை டெல்லிக்கு மோடியோட பொங்கல் கொண்டாட அனுப்புவாங்க. இதெல்லாம் உதயநிதிக்கு தெரியாம நடக்குமா?

கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அது மத்திய அரசின் கீழ் வருவதாகவும் முதல்வர் குற்றஞ்சாட்டுகிறார். கடல் வழியாக வரும் போதைப் பொருளை தெருவில்தானே விற்கிறார்கள்? உங்களின் காவல்துறை என்ன செய்தது? காவல்துறையை நேர்மையான காவல்துறையாக எங்களின் தலைவர் மாற்றுவார்.

டாஸ்மாக்கின் விற்பனை 55000 கோடியாக உயர்ந்திருக்கிறது. முதல்வரை ‘குவார்ட்டர் முதல்வர்’ என்றுதான் அழைக்க வேண்டும்.

திமுகவில் இருக்கும் மா.செக்கள் அத்தனை பேரும் திருடர்கள். தவெகவின் மா.செக்கள் அத்தனை பேரும் 30 வருடமாக சேவை செய்தவர்கள்.

அதிமுகவை விமர்சிக்காதீர்கள். அவர்களை பல ஆண்டுகளாக காணவில்லை. நம்முடைய கவனம் மொத்தமும் திமுக மீது மட்டும்தான் இருக்க வேண்டும். நாம்தான் ஜெயிக்கப் போகிறோம். மே 10 ஆம் தேதிக்குள் தலைவர் முதல்வர் ஆகிறார்.

எனக்கான முகவரியை கொடுத்தது திருமா அண்ணன். நான் என்றைக்கும் நன்றியை மறக்கமாட்டேன். தோழர் பெ.சண்முகத்தோடும் நமக்கு எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது.

நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அண்ணன் திருமாவுக்கு மரியாதை இல்லை’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *