மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில் இஸ்ரேலுக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இணை நிறுவனர் பில்கேட்ஸ், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய வம்சாவளியுமான சத்யா நாதெல்லாவும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு செயல் நுண்ணறிவு தொழில்நுட்பச் சேவையை வழங்கியதை எதிர்த்து, நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் செயல் நுண்ணறிவு துறையின் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலைமான் உரையாற்றியபோது, அவரது உரையைத் தடுத்த சில ஊழியர்கள் கூறியதாவது, செயல் நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் அக்கறை இருப்பதாக கூறுகிறீர்கள்; ஆனால், செயல் நுண்ணறிவு ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவத்துக்கு மைக்ரோசாஃப்ட் விற்கிறது.
ஐம்பதாயிரம் பேர் இறந்துள்ளனர்; எங்கள் பிராந்தியத்தில் இந்த இனப்படுகொலைக்கு மைக்ரோசாஃப்ட் அதிகாரம் அளிக்கிறது. இது உங்களுக்கு அவமானம். நீங்கள் உள்பட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அனைவரின் கைகளிலும் ரத்தக் கறை படிந்துள்ளது என்று தெரிவித்தனர்.