மொத்த பட்ஜெட்டில் 13% பாதுகாப்புத் துறைக்கு, அதிக ஒதுக்கீடு: நிர்மலாவுக்கு ராஜ்நாத் சிங் நன்றி!

Dinamani2f2024 072f4f1fcd9c 4652 4141 9628 A37a10a15f042frajnath20singh20nirmala20sitaraman20edi.jpg
Spread the love

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஜூலை 23) நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை பொறுத்தவரையில், அதிகபட்சமாக ரூ. 6,21,940.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2024 – 25ஆம் நிதி ஆண்டுக்கான மொத்த பட்ஜெட்டில் 12.9% ஆகும்.

இதில் மூலதன செலவு ரூ. 1,72,000 கோடி, ஆயுதப்படையை வலுப்படுத்த உதவும். உள்நாட்டு மூலதன கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1,05,518.43 கோடி, தன்னிறைவில் உத்வேகத்தை அதிகரிக்கும்.

எல்லையோரப் பகுதிகளிலுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை 30% (ரூ.6,500 கோடி) கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எல்லையோர சாலை அமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் தொகை எல்லையோர உள்கட்டமைப்புகளை துரிதப்படுத்தும். பாதுகாப்புத் துறை சார்ந்த புத்தாக்கத் தொழில்களை ஊக்குவிக்க ரூ.518 கோடி வழங்கப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளார் ராஜ்நாத் சிங்.

மற்றொரு பதிவில், சிறப்பான மற்றும் தன்னிகரற்ற ஆண்டு பட்ஜெட்டை (2024 – 2025) தாக்கல் செய்ததற்காக நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள்.

வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் விக்சித் பாரத் இலக்கை நோக்கிய நகர்வுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வேகமான வளர்ச்சிக்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *