இந்தாண்டு டி20 போட்டியில் எய்டன் மார்க்ரம் மோசமாக விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பையிலும் சொதப்பலாகவே விளையாடினார்.
கடந்த 16 போட்டிகளில் 212 ரன்கள் மட்டுமெ எடுத்துள்ளார். 15.14 சராசரியுடன் 116.48 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார். அதிகபட்ச ரன் 46 ஆக இருக்கிறது.
4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவுடன் விளையாடி வருகிறார். தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.
முன்னாள் தெ.ஆ. வீரர் கிப்ஸ், “நடப்பு டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகள் முன்னிலையில் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால், கடைசி 2 போட்டிகள் அதிக ரன்கள் கொண்ட போட்டியாக மாறியுள்ளது. யார் வேண்டுமானாலும் தொடரை வெல்வார்கள் போலிருக்கிறது” என்றார்.
ரசிகர் ஒருவர் அடுத்த 2 போட்டிகளில் தெ.ஆ. டாப் 6 பேட்டர்கள் குறித்து கேள்வி கேட்டதற்கு கிப்ஸ், “ வெளிப்படையாக மார்க்ரம் குளிர்பானங்களை எடுத்து செல்லலாம்” என்றார்.
கடந்த 2 போட்டிகளில் மார்க்ரம் 11 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
24 போட்டிகளில் 583 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 23ஆக இருக்கிறது. மீதமுள்ள போட்டிகளிலாவது மார்க்ரம் மீண்டு வருவாரா என தெ.ஆ. ரசிகர்கள் காத்துவருகிறார்கள்.
அடுத்து 2 டெஸ்ட் போட்டியில் இலங்கை உடன் தெ.ஆ. அணி விளையாடவிருக்கிறது. நவ.27இல் இந்தப் போட்டிகள் தொடங்குகின்றன.
தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 8.4 ஓவரில் 107/2 ரன்கள் எடுத்துள்ளது. சாம்சன் டக்கவுட் ஆக, அபிஷேக் சர்மா 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.