அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது.
அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம் (AI) `வாஷிங்டனில் மோசமான குற்றவாளி யார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
30 ஆண்டுகால தரவுகளைச் சரிபார்த்த எக்ஸ் தளம், வாஷிங்டனில் மிகவும் மோசமான குற்றவாளியை, தண்டனை மற்றும் மோசமான பெயர்களின் அடிப்படையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரைக் கூறியது.
ஜனவரி 2025 வரையில், அவர்தான் நியூயார்க்கில் 34 குற்றங்களில் குற்றவாளி என்று கூறப்படுவதாகத் தெரிவித்தது.